Thursday 5 March 2015

இடைவெளி



முதுகைக் கழியால் குத்தி எழுப்பப்படும்வரை 
அந்தக் கனவு அவனை ஆட்கொண்டிருந்தது
கனவின் நினைவில் அதரங்களில் புன்னகை 
இருந்ததுவரிசையாக நீண்ட பூக்கடைகளின் 
மையத்தில் அவன் ஒரு புள்ளியைப்போல 
உட்கார்ந்திருந்தான்மலை மலையாய் பூக்கள் குவிந்திருக்க அதற்கு அப்பால் அவள் நின்றிருந்தாள் 
அவளும் ஒருபூவைப்போலபெயருக்கு 
ஏற்றமாதிரிகுலாபி
ரோஜாமஞ்சள் நிற ஜவந்தி  மாலையும் 
சிவப்பு ரோஜா மாலையும் தோரணங்களாகத் 
தொங்கி போவோர் வருவோர் உடல் அசைவில் ஊஞ்சலாடின.  அவற்றிற்கு இடையில் தெரிந்த அந்த பட்டு முகத்தை அவன் வெட்கமில்லாமல் பார்த்தான்கரு வண்டுக் 
கண்கள் பூக்குவியல்களை ஆர்வத்துடன் வட்டமிடுகின்றனமாதுளை முத்து 
நிற  அதரங்களில் பிரமிப்பு நிறைந்த புன்னகை.  
அல்லாவின் படைப்பில் இப்படி ஒரு அற்புதமா
தொட்டால் எப்படி இருக்கும்அவன் கையை நீட்டினான்.
ஏய் எழுந்திருகனாக்காணறியா?’
இடுப்பில் சுரீரென்று கழி குத்திற்றுஅவன் 
திடுக்கிட்டுக் கண்விழித்தான்முதலில் கழி 
தெரிந்ததுலேசான வெளிச்சத்தில் போலீஸ் 
உடுப்பும்  ஜாவ்டேக்கரின் முகமும் 
கூரிய கண்களின் பார்வையும் 
மீசைக்கடியில் ஏளனச் சிரிப்பும்
சுருள்படம் விரிவதுபோலத் 
தெரிந்தனஅவன் 
பயத்துடன் எழுந்து ஒருக்கொளித்து உட்கார்ந்தான்என்ன இன்றைக்குவிடியலிலேயே 
ஆரம்பிக்கப்போகிறதா இவனது அட்டகாசம்?
எழுந்திருன்னு சொல்றேன்லே?’
அந்த அறையில் இருந்த மற்றவர்கள் 
இன்னும் தூங்கிக் 
கொண்டிருந்தார்கள்.
அவன் நழுவிக்கொண்டு போன அரைசராயை
இழுத்துக் கட்டினான்நாடா 
நைந்து போயிருந்ததுநேராக நிற்பதற்குள் 
முழங்காலில் சுரீரென்று 
வலித்ததுநேற்று இதே கழி பதம் பார்த்த 
இடம்.
கெளம்புஉனக்கு இன்னெக்கி 
விடுதலைன்னு ராத்திரி சேதி வந்துச்சு.’ 

அவன் விழித்தான்தன்னைத்தான் அவன் 
சொல்கிறானா இல்லை வேறு 
யாருக்கோவான சேதியா என்று 
அக்கம்பக்கம் பார்த்தான்
எல்லோரும் கண்மூடி முடங்கியிருந்தார்கள்.
என்ன முழிக்கிறேசேதியைக்கேட்டு சந்தோஷமா இல்லையாஎனக்கு நீ பக்க்ஷீஸ் 
கொடுக்கணும்
நல்ல சேதி சொன்னதுக்குஉம் நட...
அவன் கனவில் நடப்பதுபோல நடந்தான்
சேதி எப்போது வந்திருக்கும்அடிப்பதற்கு
முன்பாபின்பாசிறுநீர் கழிக்கவேண்டும்
போல் இருந்தது.
ஒன்னுக்கு இருந்துட்டு வர்றேன்’ என்றான் 
தலைக்குனிந்தபடி அதற்காகக் 
கூச்சப்படுபவன் போல..
சரி சரி போயிட்டு வாஆபீஸ் ரூமுக்கு.
இன்னும் பளிச்சென்று 
புலராத நேரத்தில் கழிப்பிடத்துக்குச் 
செல்லும் பாதையை 
அவன் பழக்கதோஷத்தில் உணர்ந்து
கொண்டு விறுவிறு
வென்று கடந்தான்ஆரம்பத்தில் 
இதன் வாடை காத தூரத்துக்கு வந்து 
குடலைக் குமட்டும்இப்போது புலன்களுக்கு 
எதுவுமே உறைப்பதில்லை.  
கழிப்பிடத்திலேயே இருந்த குழாயைத் 
திறந்து முகத்தைக்
கழுவினான்.சில்லென்று நீர்படும்போது 
சுகமாக இருந்ததுமூளையை 
ஊடுருவிச்சென்று சிலந்திக்கூடுகளை 
லேசாக விலக்கிற்றுவெளியே வந்துத் 
தலையை நிமிர்த்திய போது வானம் 
சாம்பல் பூக்க ஆரம்பித்திருந்தது.
என்ன சொன்னான் அவன்?
 ‘உனக்கு இன்னிக்கு விடுதலை’.
உண்மையாக இருக்குமா அதுஇல்லை 
அதுவும் ஏதாவது தந்திரமா 
அடி உதை கொடுக்க?
அவன் தயக்கத்துடன் ஆபீஸ் 
அறையின் வாயிலில் நின்றான்
மேஜை அருகில் அமர்ந்திருந்த 
வார்டனின் முகத்தில் வழக்கமான 
கடுமை குறைந்திருந்த மாதிரி இருந்தது.
வா அயூப் கான்உள்ளே வந்து 
கையெழுத்துப்போடுஇன்னிக்கு 
நீ வீட்டுக்குப் போகலாம்’.
ஏன் இப்ப திடீரென்று என்று கேட்க 
நினைத்துப் பேசாமல் இருந்தான்.
அவர்கள் கையெழுத்துப் போடச் 
சொன்ன இடத்தில் 
போட்டான்அந்தப் பக்கத்தில் ஒரு 
விடலைச்சிறுவனின் படம் 
இருந்தது.வேறு யாரோ போல் 
இருந்ததுஅவன் குனிந்து 
அதை உற்றுப் பார்த்தான்.

ஜாவ்டேக்கரும் வார்டனும் ஒருவரை 
ஒருவர் பார்த்துக்கொண்டு தலை அசைத்துச் சிரித்துக்கொண்டார்கள்.
இந்தா நீ இங்க சம்பாதிச்ச பணம் பாக்கி .
அவன் அதை எண்ணி வாங்கிக் கொண்டான்.  இரண்டு ஆயிரத்து எட்டு ரூபாய்ஏகப் பணம்போல் இருந்ததுபுதிய ரூபாய் நோட்டுக்கள்தொடவே பயமாக இருந்தது.

ஜாவ்டேக்கர் ஒரு சின்ன பொட்டலத்தை நீட்டினான்உன் டிரெஸ்நுழையறையா பாரு.
அவன் ஒதுக்குப்புறமாகச் சென்று மாட்டிக்கொள்ள முயன்றான்
சட்டைப்பிடிப்பாக இருந்ததுகால் 
சராய் இடுப்பு கொள்ளவில்லைதான் 
அணிந்திருந்த நிக்கரின் நாடாவை உருவி சேர்த்து இடுப்பில் கட்டினான்.

ஜாவ்டேக்கர் சிரித்தான்வெளியே போய் ஒரு 
லுங்கி வாங்கிக்கஇல்லே வீட்டிலே 
இருக்கும்உள்ளூர் தானே வீடு?’
இல்லே’ என்பது போலத் தலையசைத்தான்.
பின்னெ?’
அவன் பதில் சொல்லவில்லைஅது அவனது 
அந்தரங்கம் என்று தோன்றிற்றுசும்மா 
தோளைக் குலுக்கினான்.
வார்டன் ஃபைலைப் பார்த்து, ‘மைசூர்’ என்றார்லேசான வியப்புடன்.
நல்ல கூத்துஅப்ப இங்கயே வாங்கிக்க.
என்றான் ஜாவ்டேக்கர்.  
பெங்களூருக்கு ஏக 
பஸ்  போகும்அங்கிருந்து 
பஸ் புடிச்சிப் போய் 
சேரு ஊருக்கு.
யார் இருக்காங்க ஊரிலே?’
அவன் தூக்கிவாரிப்போட்டுத் திரும்பினான்
வார்டன்  தான் கேட்டதுஇதுவரைக் 
கடுகடுப்பைத்தவிர ஏதும் அந்த 
ஆளிடம் கண்டதில்லை.
அவன் யோசித்தான்மண்டையில் மீண்டும் 
சிலந்திக்கூடுகள் அடைத்துக்
கொண்டு விட்டது
போல் இருந்தது
அவன் கண்ணை மூடிக்கொண்டு 
யோசித்தான்பெரிய முற்றம் 
தெரிந்ததுபழைய பழுப்பேறிய 
குடும்பப் புகைப்படம்போல 
ஒவ்வொருமுகமும் மங்கலாகத்
தெரிந்ததுமுற்றம் மட்டும் 
பளிச்சென்று சூரியன் அங்கு 
வந்து குந்தியிருந்ததுபோல...
‘ சரிபோ பரவாயில்லேஇனி 
எந்த வம்பிலேயும் 
மாட்டிக்காதே.
அவனுக்கு மீண்டும் திடுக்கிட்டது
இதற்கு என்ன பதில் 
சொல்வது என்று தயங்கி பிறகு ஏதும் 
பேசாமல் அவன் கிளம்பினான்.
 உண்மையிலேயே வெளியில் 
வந்துவிட்டோமா  என்று 
அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
அயூப்ஏன் விடுதலை 
செஞ்சாங்கன்னு தெரியுமா?‘ 
என்றார் வார்டன்.
அவன் தெரியாது என்பதுபோல 
தலையசைத்தான்.
உன் மேல தப்பில்லேன்னு 
கோர்ட்டு சொல்லிடுச்சு.
அவன் வியப்புடன் அவரைப் பார்த்தான்.
இன்னிக்கு  ஆகஸ்டு 15.
சுதந்திர தினம்உனக்கும் சுதந்திரம் 
கிடைச்சுடுச்சு.
சந்தோஷமா இல்லையா?”
அவனுக்குத் தெரியவில்லைஅவர்கள் 
கிண்டல் செய்கிறார்கள் 
என்று பட்டது.  மனசில் இனம்
புரியாத பரபரப்பு ஏற்பட்டதுமார்பு வேகமாக 
அடித்துக்கொண்டது.  உடம்பில் 
இருந்த ரத்தம் முழுவதும் 
கழுத்துப்பிடறியில் குவிந்து முகம் 
சூடேறிற்றுசந்தோஷம் என்கிற 
உணர்வு எப்படி இருக்கும்?
போ போவீட்டுக்குப் போய் சேரு
ஏதாவது தொழில் செஞ்சு 
பிழைச்சுக்க.’ 

 அவன் வெளியில் வந்தான்பல ஹிந்தி 
சினிமாக்களில் இப்படிப்பட்ட காட்சியை 
அவன் பார்த்திருக்கிறான்காதலியோ
நண்பனோ வரவேற்கக் காத்திருப்பார்கள் . 
வெளிவாசல் வெறிச்சோடி 
இருந்தது.

கால்சராய் பிடிப்பாக இருந்ததால் 
நடக்கும்போது அரை இடுக்கைக் 
கடித்ததுகடைகள் எப்போது 
திறக்குமோ அதுவரைக் 
காத்திருக்கவேண்டும்
ப்ளாட்ஃபாரம் கடைகளில் 
மலிவாகக் கிடைக்கலாம்.  
மும்பை இன்னும் விழித்துக்
கொள்ளவில்லைசாலையில் 
அதிக வாகனம் செல்லாதது 
வியப்பாக இருந்ததுஅவனுக்கு 
நினைவில் இருந்த மும்பை
ஆரவாரம் மிக்கதுஜனசந்தடி 
மிக்கதுஅசுத்தம் நிறைந்தது
மைசூருக்கு நேர் எதிரிடை
மைசூரின் தெருக்கள் 
விசாலமானவைஇருபுறமும் 
மரங்கள் பசுமையாககுளிர்ச்சியாக
எல்லா தெருவும் சுத்தமான சுத்தம்
அமைதியான ஊர்அதிர்ந்து 
பேசாத ஜனங்கள்ஆனால் மும்பை 
அவனுக்குப் பிடித்திருந்தது
அதன் வேகம் பிரமிப்பை 
ஏற்படுத்தியதுபட்டிக்காட்டான் 
பட்டணம் வந்து நின்றது 
போல எதைக் கண்டாலும் 
அவன் வாயைப் பிளந்து 
நின்றது நேற்று போல இருந்தது
சமுத்திரத்தைக் கண்டுபெரிய பெரிய 
சினிமா போஸ்டர்களைக் 
கண்டு.  வானுயரத்துக்கு 
சுவர் எழுப்பிய பங்களாக்
களுக்குள் இருக்கும் சினிமா 
நட்சத்திரங்களின் தரிசனத்துக்காக 
நிற்கும் சிறுவர்களைக்கண்டு
அடுக்கு மாடி கட்டிடங்கள்
அதில் வசிக்கும் 
பணக்காரர்கள்ரகசியங்கள் 
பொதிந்த  தெருக்கள்
தெரு ஓரக் கடையின் பாவ் பாஜி...
மூலையில் மலையாய் 
குவிந்திருக்கும் குப்பைகள் 
பிளாஸ்டிக் பாட்டில்கள்பைகள்
சுற்றி வரும் நாய்கள்மாடுகள்...
கண்டும் காணாததுபோல ஓடும் 
ஜனங்கள்... கோலாகலமாகப் 
பொங்கிச் சிரிக்கும் 
சமுத்திரம்..
இன்று எதுவும் புரியவில்லை
விழிக்காத மும்பை விசித்திரமாக 
இருந்தது.மங்கிப் போன,வண்ண
மிழந்த ஓவியம்போல் காட்சியளித்தது.
அவன் கால்போன போக்கில் 
நடந்தான்சமுத்திரக்காற்று 
சற்று தொலைவிலிருந்து 
வந்ததுதெரு முக்கில் ஒரு 
தேநீர் கடையிலிருந்து புகை வந்தது
அவன் அதைச் சென்றடைந்த 
போது இன்னும் இரண்டுபேர் 
நின்றிருந்தார்கள்அவன் பத்து
ரூபாயை நீட்டி சில்லறையையும் 
பேப்பர் கப்பில் கிடைத்த தேநீரையும்
வாங்கிக் கொண்டான்மசாலா டீ
அதன் மணம்நாபிவரைச் சென்றது
அதன் சூடு உள்ளே இறங்கும்போது 
கிடைத்த ஆனந்தத்தை அவன் கண் மூடி 
ரசித்தான்.கண்ணைத் திறந்தபோது 
கடைக்காரன் சிரித்தான்.
 ‘இன்னொரு சாய்  வேணுமா?’ என்றான் 
மராத்தியில்குடிக்கலாமா என்று 
யோசித்து நாஷ்டா செய்யும்போது 
பார்த்துக்கொள்ளலாம் என்று 
அவன் நடையைத் தொடர்ந்தான்
நடக்க நடக்க சமுத்திரம் அருகில் 
வருவதுபோல இருந்தது
நிறைய பாத சாரிகளும் 
வாகனங்களும் தோன்றி 
களைக்கட்ட ஆரம்பித்துவிட்டது 
மும்பை.  கடற்கரை ஓரத்தில்  
பாதையோரக்கடைகள் திறந்து
விட்டதை கவனித்து அவன் 
அங்கு நகர்ந்தான்ஜீன்ஸ் 
பாண்டும் டீ ஷர்டும் குவியலாகக் கிடந்தன
ஒரு லுங்கி வாங்கிக்க‘ என்றான் 
ஜாவ்டேக்கர்

லுங்கி அணிந்து அவனுக்குப் பழக்கமில்லை
அவனுடைய உடலுக்கு ஏற்றதாகக் 
கடைக்கார சிறுவனே ஜீன்ஸும் 
டீ ஷர்டும் பொறுக்கிக் 
கொடுத்தான்மகா பேரம் செய்து , ‘சரி போணிபண்ணு‘  என்று அவன் 
இறங்கிவந்து எண்பது ரூபாய்க்குக் 
கிடைத்த உருப்படிகளை 
வாங்கி ஒரு மறைவிடத்தில் 
மாற்றிக் கொண்டபோது 
புதிய தெம்பு வந்ததுபோல் இருந்தது
தான் அணிந்திருந்த 
உடைகளை அவன் தெருவோர 
குப்பை மேட்டில் போட்டுவிட்டு 
நகர்ந்தான்கடற்கரையை 
ஒட்டி இருந்த கைப்பிடிச் சுவரில் 
அமர்ந்து கடலை வேடிக்கை 
பார்த்தான்சமுத்திர அலைகளுக்கு மேல் சூரியன் வந்து 
அமர்ந்திருந்ததுபோல தொடுவானம் 
வைரமாய் ஜொலித்தது
கரையை நெருங்கும் அலைகள் 
கருநீலமாகத் தெரிந்தன
அவன் சற்று நேரம் அதையே 
வெற்றுப்பார்வை பார்த்தான்.

ஆச்சரியமாக இருந்ததுஅவனும் 
பிரபஞ்சமும் அசையாமல் 
நின்றதுபோல் தோன்றிற்று..  
அலைகளில் மிதந்தபடி குலாபி வந்தாள்.
என்னை நினைவிருக்கா குலாபி?
அவள் கிண்கிணிச்சிரிப்புச் 
சிரித்தாள்.
உன்னை எனக்குத் தெரியவே தெரியாத போது எப்படி 
இருக்கும் நினைவு?
அவன் ஏமாற்றத்துடன் முழங்காலைக் 
கட்டி அதற்குள் முகத்தைப் 
புதைத்துக்கொண்டான்
அவனது நினைவுக்குள் நீண்ட 
பட்டியல் இருந்ததுஅந்த முற்றத்து 
வெய்யிலில் பளிச்சென்று வரிசை 
போட்டு விரிந்ததுஅவர்களுக்கு அவனை 
நிச்சயமாக நினைவிருக்கும்
வாப்பாஅம்மா ஜான்பாய்ஜான்..
நினைவிருக்குமா அவர்களுக்கு?

கவிழ்ந்த முகத்துக்கடியில் 
முற்றம் தட்டாமாலையாய்ச் 
சுழன்றதுஅம்மாஜான் செய்யும் கொத்து 
பரோட்டாவின் மணம் வா வா என்றது.
வா வா அயூப்நீ கேட்டமாதிரி 
குருமா வெச்சிருக்கேன் 
தேங்காய்பால் விட்டு...
அவன் கண்களிலிருந்து நீர் ஆறாய் 
வழிந்தது
என்னை உங்களுக்கு இப்ப 
அடையாளம் தெரியுமா
பரோட்டா செஞ்சு தருவீங்களா 
குருமாவோட?
இத்தனைக் கண்ணீர் இத்தனை 
நாள் எங்கிருந்தது 
என்று அவனுக்கு வியப்பேற்பட்டது
எல்லா கண்ணீரும் வடியட்டும் 
என்று அவன் அதைத் 
தன்னிச்சையாக விட்டான்.  
கழுத்தில் சுரீரென்று 
வெய்யில் பட்டதுஅவன் 
கழுத்தைக் கைய்யால் 
வருடிவிட்டுத் தலை நிமிர்ந்து 
முகத்தையும் கண்ணையும் 
துடைத்துக்கொண்டான்சற்று 
தள்ளி ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான்
அவனைப் பார்த்துச் சிரித்தான்.
ஏன் அழறேவேலை 
வேணும்னா சொல்லுநா 
வாங்கித் தர்றேன்’.

அவன் அவசரமாக எழுந்தான்
பதிலே சொல்லாமல் நடக்கஆரம்பித்தான்.
ஏய் நீ என்ன செவிடா இல்ல ஊமையா?’
எந்த வகையிலோ அந்தச் சிறுவன் 
தன்னையே நினைவு படுத்துவதுபோல இருந்ததுஅவன் 
திரும்பி அந்தச் சிறுவனைப் 
பார்த்தான்சற்று முன் அவன் 
குப்பைமேட்டில் எறிந்திருந்த 
சட்டையையும் கால்சராயையும் 
அவன் அணிந்திருந்தான்
ஒருஅறை விட்டால் என்ன அந்தத் 
திமிர்பிடித்த முதுகில் என்றிருந்தது.
உண்மையில் வார்த்தைகளே 
மறந்து போனதுபோல் இருந்தது
ஒரு வாக்கியம்கூட பேச வராது 
என்று தோன்றிற்றுஅவன் பேசி 
எவ்வளவோ நாட்களாகிவிட்டன...
நாட்களா வருஷங்களா என்று 
கூட நினைவில்லை
மும்பையை விட்டுச் செல்லும் வரை 
வாயைத் திறக்கக் கூடாது என்று 
அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
பேருந்து பிடிக்க ஒரு நீண்ட கியூ
இருந்ததுஅதனுடன் 
அவனும் சேர்ந்துகொண்டான்.  
நிலையத்துக்கு வந்து நின்ற 
பஸ் தாதர்  ஸ்டேஷனுக்குச் 
செல்வது என்று புரிந்தது
அவன் அதனுள் ஏறிக்கொண்டான்
கண்ணுக்குப் புலப்படாத ஒரு 
கைஅவனை நெட்டித்
தள்ளுவதைப்போல இருந்தது.  

உடம்பும் மூளையும் இயந்திர 
கதியில் இயங்கின. ரயில் நிலையத்தில் 
நுழைந்ததும் அங்கிருந்த 
கூட்டம் அவனைத் திக்குமுக்காட 
வைத்ததுபிரளயம்போல 
ஜன அலை நிற்காமல் முன்னால் 
புரண்டு சென்றதுஅலையில் 
மிதந்தபடி அவன் டிக்கட் 
கௌண்டருக்குச் சென்றுநின்றான்
உள்ளே இருந்த ஆள் மெஷினாக 
இருக்கவேண்டும்வாயே 
திறக்காமல் பணத்தை வாங்கி
டிக்கெட் கொடுத்த வண்ணம் 
இருந்தான்அவனது வேகமும் 
வெற்றிலை மெல்லும் வாயும் 
தடித்த மௌனமும் அவனை
மிரளவைத்தது.  பலமுறை கேட்டு 
திட்டு வாங்கி மைசூருக்கு 
டிக்கெட் கிடைத்தது
காததூரம் ஓடியதுபோல 
நெற்றியில் வியர்வை 
ஆறாய் பெருகிற்று.  
மாலையில்தான் வண்டி
அவன் வெளியில் வந்து 
மூலைக்கடையில் கிடைத்த 
பாவ் பாஜியை வாங்கி 
ஆற அமர சாப்பிட்டான்
எத்தனை சாப்பிட்டாலும் 
வயிறு இன்னும் இன்னும் 
என்று வெட்கமில்லாமல்
கேட்டது
மாம்பழச்சாறு__ ஆம்ரஸ் அதற்குமேல்
மனசு மகிழ்ச்சியில் திளைத்தது.
இப்ப சந்தோஷம்தானே?’
இதுதான் சந்தோஷம் என்று 
தோன்றிற்றுபுதிய 
கண்டுபிடிப்பாக  இருந்தது
நம்பக்கூட முடியவில்லை
ஜாவ்டேக்கரின் கழிக்கு 
பயப்படாமல்கூட இருந்த 
மற்றவர்களின் ஏவல்கள் ஏசல்கள் 
காதில் விழாமல்... அவர்கள் செய்த 
அத்துமீறல்களைக் கண்டு 
ஓடி ஒளிய முயற்சிக்காமல்... எப்படி 
சாத்தியமாயிற்று?
உன் மேல தப்பில்லேன்னு சொல்லிடுச்சு கோர்ட்டு.
அடப்பாவிகளா.... மேலும் கீழுமாக 
படியேறி இறங்கி அலைந்து  
பார்வையாளர்கள் காறி 
உமிழ்ந்துஅதை ஜீரணிக்கமுடியாமல் 
தலைக் கவிழ்த்து...அந்தப் 
பாதையில் குண்டும் குழிகளும் 
எத்தனை என்று அவன்  மூளையில் 
மனப்பாடமாகப் பதிந்து...அந்த 
நடையிலேயே மனசும் உருவமும் 
மூப்படைந்து...சினிமா காட்சி 
அதுஅபத்தமானநம்பமுடியாத 
கதைஅதில் அவன் 
தோற்றுப்போன ஹீரோ.
பெரிதாகச் சிரிக்கவேண்டும்
போல் இருந்தது.
குலுங்கக்குலுங்க சிரிக்கவேண்டும்
போல . அது அழுகையாகவும் 
இருக்கலாம்.  அடுத்தமேஜையில்  
உட்கார்ந்திருந்த இளைஞர்கள் 
அவனை உற்றுப்பார்ப்பது 
கண்டு அவன் எழுந்தான்அவன் 
தன் கதையைச் சொன்னால் 
அவர்கள் சிரிப்பார்கள்
நம்பக்கூட மாட்டார்கள்
நாங்க முட்டாள்னு 
நினைக்கிறியா என்பார்கள்.


 இது அவனது அந்தரங்கம்அவமானம்
யாரிடமும் சொல்லத் தேவையில்லை
ஊர் போய் சேர்ந்ததும் எல்லாரும் 
கேட்பார்கள்என்ன சொல்வது
நிஜத்தையா ?
அயூப் நீயாஎங்கடா காணாம போனே?
நீ செத்துட்டேன்னு எல்லாரும் 
நினைச்சாங்க..
கிட்டத்தட்ட செத்துப்போன மாதிரிதான்.
அப்ப நீ  அயூபுடைய ஆவியா 
என்று சிரிப்பார்கள்.
ஆவிதான் என்று அவன் 
தனக்குள் சொல்லிக்கொண்டான்
பழைய அயூப் செத்துப்போனான்
அவனே அவனைத் தூக்கி 
எறிந்துவிட்டான்.  அந்தச் சட்டையையும் 
கால்சராயையும் எறிந்தது போல
இப்போது உள்ளே இருப்பது வேறு 
ஒரு ஆள்இவனை அவர்கள் 
ஏற்பார்களா என்பதுதான் அவனது 
கவலைஅம்மாஜான் நினைவு வந்தது
அடிவயிறு துவண்டதுகண்களில் 
நீர் நிறைந்ததுஅவள் அவனை
நம்பவேண்டும்யார் நம்பாவிட்டாலும் 
அவள் நம்புவாள் என்று அவன் 
ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
அவன் எழுந்து கை கழுவ குழாயை 
தேடினான்ஒதுக்குப்புறமாக 
ஒரு மிகச் சிறிய வாஷ் பேஸின் 
இருந்ததுஅதற்கு மேல் 
கையளவில் மங்கிப்போன முகம் 
பார்க்கும் கண்ணாடிஅதில் தெரிந்த 
முகம் அவனுக்குப் 
பரிச்சயமில்லாத முகமாக இருந்தது
முகத்தை அவன் நன்றாகக் 
கழுவி ஈரக்கையினால் 
தலையைக் கோதி விட்டுக்கொண்டான்
ப்ளாட்ஃபாரக் கடையில் வாங்கிய 
கைக்குட்டையினால்  முகத்தைத்
துடைத்துக் கொண்டதும் சற்று 
தெம்பு வந்தது.   மாலைவரை 
பொழுதைக்கழிக்க 
என்ன செய்வது என்று புரியவில்லை
சற்று தொலைவில் ஒரு சிறிய 
பூங்கா இருந்ததுஅங்கு 
இருந்த பெஞ்சு ஒன்றில் 
அமர்ந்தான்எதிரில்  ஒரு 
பள்ளிக்கட்டிடம் தெரிந்தது
காம்பவுண்டு சுவருக்குமேல் 
தேசியக் கொடி பறந்தது
மாணவர்கள் கூட்டமாக ஜனகணமன 
பாடுவது கேட்டதுஎன்ன இன்று
ஆகஸ்ட் 15.  அந்த வார்டன்கூட 
இன்று கொடி ஏற்றுவார்அவன் 
முழங்காலை தூக்கி மடித்து 
கைகளால் கட்டி முகத்தை 
புதைத்துக்கொண்டான்.
ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா...’ 
அவன் கொடியைத் தூக்கிக்கொண்டு 
ஓடுகிறான் .ஆர்.ரெஹ்மானின் 
மா துஜே சலாம்’ ஸ்டைலில்
மனசு பொங்கிப்பொங்கி எழுகிறது.
மா துஜே சலாம்.... 
தலையில் காந்தி குல்லா.
         
 அவனுடன் ஓடும் நண்பன் 
பசவப்பா.நெற்றியில் எப்பவும் 
விபூதி அணிந்திருப்பான்அவன் 
வீட்டுப் பூஜைகளுக்கு 
வாப்பாவின் கடையிலிருந்துதான் 
பூ வாங்கிப் போவார்கள்.  அவன் 
அப்பாவும் வாப்பாவும் 
ஜிக்ரி தோஸ்துகள்அதே போல 
அவனும் பசவப்பாவும்
ஸ்கூலில் அடுத்தடுத்த 
நாற்காலியில் அமர்வார்கள்
பசவப்பாவின் எதிரில் போய் 
நின்றால் அவனுக்கு என்னை 
அடையாளம் தெரியுமா
முன்பு போல் என்னை வந்து 
அணைப்பானாநடுவில் 
ஒரு யுகம் நழுவிப்போயிருந்தது
அத்துடன் நம்பிக்கைகள் உறவுகள் 
காணாமல் போயிருக்கும்அவனுக்கு 
மீண்டும் அழுகை வந்தது 
காரணம் புரியாமல்யாரோ
செத்துப்போனதற்கு அழுவதுபோல.

அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு 
எழுந்தான்சிறுவர்கள் சீறுடையில் 
பள்ளியிலிருந்து வெளியில் வந்து
கொண்டிருந்தார்கள் சளசள
வென்று சிரித்தபடி.  அவன் சற்று நேரம் 
ஆர்வத்துடன் பார்த்துவிட்டு 
ஸ்டேஷனுக்கு நடையைக்
கட்டினான்முன்பு மைசூருக்குக் 
கிளம்பமுடியாமல் போனது 
நினைவுக்கு வந்ததுஇன்று 
அப்படி ஏதும் நடப்பதற்குள் 
போய்விடவேண்டும்.

      மைசூருக்குச் செல்லும் 
தனிப்பெட்டியில் இன்னும் 
ஜனம் வரவில்லை.  அவனுக்கு 
ஜன்னலோரமாக சௌகர்யமாக 
ஒரு இருக்கைக் கிடைத்திருந்தது 
படுக்கும் வசதியுடன்இரவுக்கு ஒரு 
சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிகொண்டு அவன்  சீட்டில் 
சாய்ந்து  அமர்ந்தான்இன்று 
விடியும்வரை இப்படி மைசூருக்குச் 
செல்லும் வண்டியில் உட்காருவோம் 
என்று அவனுக்குத் தெரியாது 
என்பது விந்தையாக 
இருந்ததுபெட்டி நிரம்ப ஆரம்பித்தது
இவர்கள் எல்லோரும் நிச்சயமான 
ஒரு வாழ்வு வாழ்பவர்கள்
நாளை என்ன செய்யப்போகிறோம் 
என்று அறிந்தவர்கள்ரயில் சீக்கிரம் 
கிளம்பாதா என்றிருந்தது அவனுக்கு
தாமதமாக ஆக அவனுடைய நிலை 
நிச்சயமற்றதுஒரு காக்கி சட்டை 
அவனை எழுப்பலாம்பிடறியில் 
கையை அழுத்தி நட ஸ்டேஷனுக்கு‘ 
எனலாம்.

நல்ல வேளை ரயில் கிளம்பிற்று 
ஒரு வழியாய்அவன் வெளியில் 
விரைந்து மறையும் வெளி 
உலகத்தை சற்று நேரம் வேடிக்கை 
பார்த்தான்இதன் பயணத்தின் 
முடிவில் இருக்கிறது மைசூர்.
அவன் சாப்பிட்டுப் படுத்தான்

கண்ணை சுழற்றிக்கொண்டு 
தூக்கம் வந்ததுதூங்கவே 
பயமாக இருந்தது
கண்ணை மூடிய உடனேயே 
பேய்கள் அவனை சூழ்ந்து கொள்ளும்
கையில் சாட்டையை வைத்துக்கொண்டு 
மிரட்டும்‘ அயூப் கான் சொல்லு
நீ யார்எந்தக் கும்பலைச் 
சேர்ந்தவன்?நீ யாரு?’

முதுகு பிளந்து ரத்தம் சொட்டும்.  
அவனுக்கு வரும் மயக்கத்தில் 
அவர்கள் மீண்டும் மீண்டும் அந்தக்
கேள்வியைக் கேட்கும்போது 
தான் யார் என்றே அவனுக்கு மறந்து 
போகும்பெயர் கூட ஞாபகம் 
வராது.  ஒரு சமயம் பசவப்பா என்று 
சொன்னான்பொய் சொல்றியா
திருட்டு ராஸ்கல்அய்யோ அம்மா 
காலும் கையும் முதுகும் துண்டு 
துண்டாக்கினது போல 
அடிகிடைத்தது.

இன்று பிசாசுகளை விரட்டிக்கொண்டு 
ஊர் தெருக்கள் வந்தனவாப்பாவும்
அம்மியும் ஓடிவந்தார்கள்.   
தேவராஜ் மார்கெட் விரிந்து கொண்டு 
போயிற்றுவாப்பா பூக்குவியலுக்கு 
அருகில் நடு நாயகமாக அமர்ந்து 
கன்னடத்தில் கூவுகிறார்
கால் கேஜி மல்லிகே 20 ரூபாய்
கால் கேஜி ரோஜா 
ஹூவூ இப்பத்து ரூபாய்
பன்னிபன்னி! [வாங்கவாங்க]
அண்ணன் அகமத்  அவனை 
இழுத்துக்கொண்டு ஓடுகிறான்.
வாவாநிறைய மாலை 
தொடுக்கணும் . நாளை கணேசா 
ஹப்பா [பண்டிகை]. 
அவன் கட்ட கட்ட மாலைகளை  
அள்ளிக்கொண்டு போகிறார்கள்.
அவன் காத்திருக்கிறான்.  
குலாபி வருகிறாள் . 
முகத்தில் சிரிப்பு இல்லை.  
அவன் தோளைக் குலுக்குகிறாள்.

அல்கொய்தாவாஇந்திய 
முஜாஹுதீனா?’நீ யாரு
சொல்லு சொல்லு !
   
சாரே ஜஹான்ஸெ அச்சா..
இந்துஸ்தான் ஹமாரா
ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா...
அவன் கையில் கொடி
ஏஆர் ரெஹமான் ஸ்டைலில்.. 
மா துஜே சலாம்.

அவன் கண்விழித்தபோது பொழுது 
நன்றாகப் புலர்ந்திருந்ததுஅவன்
சரேலென்று எழுந்து 
உட்கார்ந்தான்எதிரில் 
அமர்ந்திருந்த பெரியவரிடம்
அவன் கேட்டான்.
பெங்களூர் போயிடுச்சா?’
அரைமணிநேரம் ஆகுது
அங்க இறங்கணுமா?”
இல்லே மைசூரு.
“ நீ என்ன வருஷக்கணக்கா 
தூங்காதவனாட்டம் தூங்கினே?’”
அவன் பதில் சொல்லாமல் 
கழிப்பிடத்துக்குச் சென்றான். 
மைசூரை நெருங்க நெருங்க உடம்பின் 
ரத்த நாளங்களெல்லாம் உசுப்பிக்
கொண்டதுபோல் இருந்ததுமனசு 
நிலைகொள்ளாமல் பரபரத்தது.   
சீதோஷ்ணம் வெகுவாக
மாறியிருந்ததுதண்ணென்று 
வாடைக்காற்று அடித்ததுஅப்படியும் 
அவனுக்கு உள்ளங்கை வியர்த்தது.
மைசூரில் வண்டி நின்றதும் அவன் 
தாபத்துடன் தன்னைச் சுற்றிப் 
பார்த்தான்புரட்சி வெடித்ததுபோன்ற 
மும்பை நிலையத்திற்கும் 
அமரிக்கையான இந்த
நிலையத்திற்கும் எந்த ஒட்டு உறவும் 
இல்லை என்று தோன்றிற்று.  
பூமியில் கால் பதித்ததும் 
உணர்ச்சிவசப்பட்டு அவனுக்குக் 
கண்களில் நீர் நிறைந்தது
எந்த பூதம் என்னை அங்கு இட்டு 
சென்றது?

அவன் வெளியில் வந்து அந்தக் 
காற்றை இழுத்து சுவாசித்தான்
சற்று தூரத்தில் இருந்தது 
அரண்மனைமுத்துப்போல 
அழகோ அழகுநார்சந்தியின் 
நட்ட நடுவில் கிருஷ்ண தேவரஜ ஒடையரின் சிலை . 
சற்று தொலைவில் 
தேவராஜ அர்ஸ்  சாலை
அதைக் கடந்தால் 
தேவராஜ மார்கெட்
அவனுடைய வாப்பா
மற்றும் அகமத் பூ வியாபாரம் 
செய்யும் இடம்இன்னேரம் 
அங்குதான் இருப்பார்கள்
அவனுக்கு உடனடியாக 
அம்மாஜானைப் பார்க்கவேண்டும் 
என்று  இருந்ததுவீட்டிற்குச் 
சென்றால் ஓரளவு நிலவரம் 
புரியும்.

கடைத்தெருக்களின் கலகலப்பு 
மனசில் ஒரு நூதன 
கிளுகிளுப்பையும் பாதுகாப்பான 
உணர்வையும்  
ஏற்படுத்திற்றுபூரி மசாலா 
வாசனை காற்றில் 
மிதந்து வந்தபோதுதான் 
தனக்கு அசுர பசி இருப்பதையும் 
தான் ஒரு உணவகத்துக்கு முன் 
நிற்பதையும்  அவன்  உணர்ந்தான்
வீட்டில் இந்த வேளையில் 
நாஷ்டா தயாராகி இருக்குமா 
என்று தெரியாதுபுதிதாகத் 
தென்பட்ட அந்த ஹோட்டலுக்குள் 
நுழைந்து  ஒரு கப் காப்பிக்கும் 
ஒரு மசாலா தோசைக்கும் 
ஆர்டர் செய்து  சுற்றிலும் 
ஒரு துரித பார்வை 
பார்த்தான்.  அவனுக்குப் 
பரிச்சயமான முகம் 
ஏதும் புலப்படவில்லை
அல்லது அவனை யாருக்கும் 
அடையாளம் தெரியவில்லை
அவன் லேசாகக் கண்ணை
மூடி நாற்காலியில் சாய்ந்து 
உட்கார்ந்தான்ஊருக்கு 
வந்துவிட்டோம் . அவன் 
பிறந்த ஊர்பழகிய எளிய மக்கள்
எல்லோரும் மதிக்கும் பூக்கடை 
மெஹ்பூப்கானின் மகன்
காணாமல் போனவன் திரும்பிவிட்டான்
காணாமல் போன ஆடு திரும்பியதுபோல
யாரோ அவன் தோளைத் 
தொட்டார்கள்தன்னிச்சையாக 
தோள்கள் பயத்தில் விதிர்த்தன
அவன் திடுக்கிட்டு கண் 
திறந்தான்.
“ அயூப்?”
எதிரில் நெற்றியில் விபூதி 
கீற்றுடன் ஒருத்தர் நின்றிருந்தார்
அவனுக்குப் பொறிதட்டிற்று.
பசவப்பா?”
சட்டென்று எழுந்தான்அவனை 
அணைத்துக் கொள்ளச் சென்ற 
கரங்கள் பின்வாங்கினகுளித்து 
எத்தனையோ நாட்களாகிவிட்டன.  
எதிரில் நிற்பவன் தூய்மையின் 
உறைவிடமாக இருந்தான்.
பசவப்பா அவனது இரு 
தோள்களிலும் கைவைத்து 
நம்பமுடியாதவன்போல் சிரித்தான்.
“ எங்கேடா ஓடிப்போனே
சொல்லாம கொள்ளாம
எத்தனை வருஷமாச்சு
எங்கே இருந்தேஎன்ன 
பண்ணறே?”
அவனுக்குக் கண்களில் 
மீண்டும் நீர் நிறைந்தது.
“ அடையாளம் கண்டுக்கிட்டியா
ஆச்சரியமா இருக்குஉன்னை 
எனக்குத் தெரியல்லே பாரு
ரொம்ப குண்டாயிட்டே.
பசவப்பா அட்டகாசமாகச் சிரித்தான்.
“ தெனம் மசாலா தோசை 
சாப்பிட்டா என்ன ஆகும்
நீ காயலாக்காரன் மாதிரி 
இருக்கே . ஆனா  முகம் 
மாறல்லேகொஞ்சம் வயசான 
முகம்சரி என்ன ஆச்சுஏன் 
ஒரு லெட்டர்கூட போடல்லே
இப்ப ரிக்க்ஷாக்காரன் இஸ்த்திரி 
காரங்க கூட செல் ஃபோன் 
வெச்சிருக்காங்கநீ ஏன் இப்படி 
இருக்கே?”
 “ அது ஒரு கதை பசவப்பா
பயங்கர கதைநீ நம்புவியோ 
மாட்டியோஅப்புறம் நீ இப்படி 
கை போட்டுக்கூடப் பேசமாட்டே.” 

  பசவப்பா அவனை யோசனையுடன் 
பார்த்தான்.  நா மாறியிருப்பேன்னு 
நினைச்சியாஉருவம் 
மாறினா மனசும் மாறிடுமா
நம்ம சிநேகிதம் மறக்குமா?”
பிறகு சிரித்துக்கொண்டே 
மேஜையில் தாளம் 
போட்டு ஜண்டா ஊஞ்சா ரஹே 
ஹமாரா‘ என்று 
பாடினான்.
அவன் சிரித்துக்கொண்டு  
தலையாட்டினான்நாபியிலிருந்து 
பந்தாய் ஏதோ மேலெழுந்து 
தொண்டையை அடைத்தது.
‘ இந்தப்பாட்டை நினைக்கும்
போதெல்லாம் எனக்குக் 
கண்ணுலே தண்ணி வருதுன்னா 
நீ நம்புவியோ பசவப்பா?”
‘ கண்டிப்பாஎனக்கும் வரும் .
 நா ஒரு கிறுக்குன்னு எம் 
பசங்க நினைக்கிறாங்க.
டிபனும்  காப்பியும் வந்தது.
நீயும் சாப்பிடேன்’.
எனக்குத்தான் முதல் 
நைவேத்தியம் இங்கேஇது 
என் ஹோட்டல்தோசை 
மட்டும் போதுமா இட்டிலியும் 
சாப்பிடுஇவரு நம்ம விருந்தாளிப்பா.
வயிறு முட்டிவிட்டதுஇந்த 
ருசியையெல்லாம் மறந்துகூட
போய்விட்டிருந்தது.
உம் சொல்லு உன் கதையை.
அவனுக்குக் கூச்சமாக இருந்தது.
முதல்லே 
வீட்டுக்குப் போறேன் பசவா.

‘ சரி போஉங்க அம்மி 
சந்தோஷப்படுவாங்க.  
பாவம் என்ன அழுகை அழுதாங்க
நீ  செத்துப் போயிட்டேன்னு 
அவங்க நினைக்கிறாங்க
நாந்தான்நம்பல்லேநல்ல வேளை 
நீ  உயிரோட இருக்கேஆமா 
எதுக்கு அப்படி ஓடினேயாரும் 
பரிட்சையிலே ஃபெயிலாற
தில்லையாஅப்பா 
அம்மா திட்டறதில்லையா? “
அவன் தலையைக் குனிந்துக்
கொண்டான்வாப்பாவின் 
கோபக்கார முகமும் அடித்த 
அடியும் அவனுள் பொங்கிய 
கோபமும் நினைவிலிருந்து மறைந்து 
எத்தனையோ நாட்களாகிவிட்டன.
“ ஆமாம் நா செஞ்ச ரொம்பப் 
பெரிய அசட்டுத்தனம் பசவா
விதிங்கறதிலே உனக்கு நம்பிக்கை 
இருக்கோ?”
பசவப்பா அவனையே 
பார்த்தபடி இருந்தான்“ நீ 
இங்கயே இருந்திருந்தா 
விதி ஒண்ணும் செஞ்சிருக்காது.  
சரி வா உன் வீடு வரை நா 
வர்றேன்  பேசிட்டு போவோம்.
இப்ப இல்லே பசவப்பாஇன்னொரு 
நாளைக்குச் சொல்றேன்
சரி உன் இஷ்டம்நீ எதுவுமே 
சொல்ல வேணாம்
உன்னைப் பார்த்தது எத்தனை 
சந்தோஷமா இருக்குதெரியுமா
ஸ்ரீரங்கபட்டணத்திலே ஒரு ஹோட்டல் 
திறக்கப் போறேன்திப்பு 
சுல்தான் ஊர் ஆனதாலெ 
திப்புஸ் கஃபேன்னு 
பேரு வைக்கப்போறேன் ‘ என்று 
கண்சிமிட்டிச் சிரித்தான்
“ எனக்கும் உதவிக்கு ஆள் 
வேணும்நீ அதைப் பாத்துக்கலாம்
இதப் பாரு சும்மா சும்மா 
கண் கலங்கக் கூடாது.’       
பசவப்பா அவன் முதுகில் தட்டி, “சாயங்காலம் சந்திக்கலாம்.
ஒரு காரியம் செய்யலாம்
கிருஷ்ணராஜசாகர் அணைக்குப் 
போகலாம்இந்த வருஷம் 
நிறைய மழைஎக்கச்சக்கத் 
தண்ணி இருக்குபார்க்க 
ஜோரா இருக்கும் ” என்றான்.
அவன் புன்னகையுடன் தலை 
அசைத்து  வீட்டை 
நோக்கி நடந்தான்மனசு 
லேசாகி  இருந்தது
பசவப்பா மாறவே இல்லை 
என்பது நம்பமுடியாததாக 
இருந்ததுஎன் கதை தெரிந்தால் 
என்ன சொல்வான்?
நீ எதுவுமே சொல்லவேணாம்.
எப்படிஇங்கு எதுவும் 
மாறவில்லையா?
தெருக்கள் அப்படியேதான் 
இருந்தனமும்பை 
நகரத்தைப்போல எந்த 
அடுக்குமாடி கட்டிடமும் 
இதுவரை தென்படவில்லை
பளபளப்பான அங்காடிகள் இல்லை
அமைதியாக இருந்தது மைசூர் 
ஏதோ மோனத்தவத்தில் இருப்பதுபோல.
அவன் வசித்த தெருபதினாறு வயது 
வரை இந்தப் புழுதியில் 
விளையாடிய தரைக்ரிக்கெட் 
விளையாடிய இடம்அடுத்த 
தெருவில் இருந்தது அவனும் 
பசவப்பாவும் படித்த ஸ்கூல்
அப்பா அவனையும் 
அண்ணனையும் மதரஸா 
பள்ளிக்கு அனுப்ப
வில்லைஎல்லா இந்திய
பிள்ளைகளும் படிக்கிற 
இடத்திலேதான் நீங்களும் 
படிக்கணும் நாம 
வித்தியாசமானவங்க இல்லே 
என்றவர்படிப்பு தாண்டா ஆயுதம் 
என்பார்நீயும் பூவித்துதான் 
பிழைக்கப்போறியா படிக்காத 
அப்பன்மாதிரி என்று சொல்லித்தான் 
அன்று அடித்தார்அவனுக்குப் பூ
விற்பது கௌரவக் குறைச்சலாகத் 
தோன்றவில்லைஅங்குதான் 
குலாபியைப் பார்க்கமுடியும்.
சட்டென்று அவன் கால்கள் 
தயங்கினவீடுஅவன் வசித்த 
வீடுவாப்பாவும் அகமத்தும் 
பூக்கடைக்குப் போயிருப்பார்கள்
அவன் வாயிலில் நின்று கதவின்
மேல் இருந்த அழைப்பு மணியை 
அழுத்தினான்.
யாரூஎன்று கேட்டபடி ஒரு 
வயதான அம்மாள் வந்தாள்
அவனுக்குத் தொண்டை அடைத்துக்
கொண்டதுகண்களில் நீர் 
நிறைந்ததுதலையெல்லாம் 
நரைத்துகண்கள் ஒளியிழந்து,
“ அம்மி!” என்றான் மெல்லிய குரலில்.
அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது . 
சற்று நேரம் உற்றுப்பார்த்து 
திகைத்த குரலில், ‘ யாருஅயூபா
வந்துட்டியா ?’ என்று விசும்பியபடி 
அவனை அணைத்துக்கொண்டாள்.
எனக்குத் தெரியும் ஒரு நாள் 
நீ வருவேன்னுநீ 
உசிரோடதான் இருப்பேன்னு
எங்களையெல்லாம் ஒதுக்கிட்டு 
போன கல்நெஞ்சுக்காரன் நீன்னு 
எனக்கு ரொம்பக் கோவம் இருந்தது.
அவன் உடைந்துபோனான்.  
அவளது அணைப்பில் இத்தனை 
ஆண்டுகளாகப் பட்ட துயரங்கள் 
அவமானங்கள் எல்லாவற்றிற்கும் 
கிடைத்த வடிகாலாக 
கண்ணீர் கரை புரண்டு ஓடிற்று
மார்புக்கூடு விண்டுவிடும்போல 
கேவல் கிளம்பிற்றுவார்த்தைகளே
வரவில்லை.
“ அழாதேஉள்ளே வாகோவத்
தோட வீட்டைவிட்டு ஓடினியே
இருபது வருஷமா நீ இருக்கியா 
செத்தியான்னு தெரியாம நாங்க 
பட்ட பாடு உனக்குப் 
புரியுமாஇப்ப திடீர்னு வீட்டு 
ஞாபகம் வந்துதா?’
அவன் தீவிரமாகத் தலையாட்டினான்
முகத்தைத்துடைத்து ஆசுவாசப்படுத்திக்
கொண்டான்கடந்த இருபது 
வருஷத்திலே உங்களை நினைக்காத 
நேரமில்லேஎன்னை நீங்க நம்பணும்.
ஒரு போன் செய்ய முடியல்லே
கடுதாசு போடமுடியல்லே?’
முடியல்லேநா ஒரு விசித்திர 
இக்கட்டிலே மாட்டிக்கிட்டேன் 
அம்மிஅது ஒரு பயங்கர கதை.
அம்மாவின் கண்கள் பீதியில் 
விரிந்தனஏதானும் 
தப்பு தண்டாவிலே சேர்ந்து
கிட்டயாசில அசட்டு 
பிள்ளைங்கமாதிரிநம்ம ஜனத்தும் பேரை கெடுக்கற மாதிரி
அப்படீன்னா இப்பவே 
கிளம்பிப் போயிடுவாப்பா 
வர்றதுக்கு முந்தி.
அவன் திகைத்தான் அவளுடைய 
தீவிர முகபாவத்தைக்கண்டு.
இல்லேஇல்லேநா 
சொல்றதை நீங்க நம்பணும்.
“ வா உள்ளே வாசொல்லு”.
உள்ளே நடுக்கூடம் வழக்கம் 
போலவே அதிக வெளிச்சம் 
இல்லாமல் இருண்டிருந்தது
அங்கு இருந்த பழைய 
சோபாவில் இருவரும் அமர்ந்தார்
கள்.
அம்மாஜான் அவனை ஆதுரத்துடன் 
பார்த்தாள்அவனது தாடைகளை 
வருடினாள்அவள் கண்களில் 
வழிந்த நீரைக்கண்டு 
அவனுக்கு துக்கமேற்பட்டது.  
அவளை அணைத்துத் தனது 
துயரங்களை அதில் கரைக்கவேண்டும்
போல் இருந்தது
நாஷ்டா சாப்பிட்டியா கண்ணு
காபி வேணுமா
கொண்டு வரேன்” என்று எழுந்திருக்கப் போனவளை அவன் தடுத்து 
உட்கார்த்தினான்.
“ வேண்டாம் அம்மிவரும்போது 
சாப்பிட்டுதான் வரேன்”.
அவன் அவளது கைகளைப் 
பற்றிக்கொண்டான்.” 
அம்மிநா சொல்ற ஒவ்வொரு 
வார்த்தையும் நிஜம்.நா பொய் 
சொல்ல மாட்டேன்.
சொல்லுமருமக குளிக்கப் 
போயிருக்காவீட்டிலே 
யாருமில்லே.
அம்மி உங்க மடியிலே படுத்துக்கலாமா?”
படு கண்ணு.
மெத்தென்றிருந்தது அவளது 
தொடைஅதன் மெல்லிய சூடு 
அவனது ரணங்களையெல்லாம் 
ஆற்றுவதுபோல 
சுகமாக இருந்ததுஉயிர் 
இதற்காகவேஇந்தத் 
ருணத்துக்காகவே காத்திருந்தது போல இருந்ததுஅவன் 
கண்களை மூடிக் கொண்டான்
பதினாலுவயதுச் சிறுவானாகிப்  
போன துடிப்பு ஏற்பட்டது.

அன்று என்ன மழை பெய்தது!அவன் படுக்கையில் தீவிர 
யோசனையுடன் படுத்திருந்தான்
சொல்லத்தெரியாத ஆத்திரம் 
அவனை ஆட்கொண்டது
பரிட்சையில் யாரும் 
ஃபெயிலாவதில்லையா
அதற்காக அப்படி அடிக்கவேண்டுமா?  
பரிட்சையில் பெயிலான 
துக்கத்தைவிட அதுவரை 
அவனை அடித்தோ திட்டியோ 
செய்யாத வாப்பா 
கோபத்துடன் தனது பெல்டால் 
விளாசியதும் வார்த்தைகளால் 
அவமானப்படுத்தியதும் தாங்க
முடியாத துக்கத்தைக் கொடுத்தது
அவர்மேல் காரணம் 
புரியாத சீற்றத்தை ஏற்படுத்தியது
முதுகில் அவர் அடித்த இடம் 
சுரீரென்று நெருப்பாய் தகித்தது.  
களிம்பு மருந்து தடவ வந்த 
அம்மியை அவர் 
மூர்க்கத்துடன் தள்ளினார்.  
எதுவுமே நடக்காததுபோல 
எல்லோரும் படுக்கச் சென்றார்கள்
அவனுக்குத் தூக்கம் வரவில்லை
உள்ளே குமுறிய கோபத்தில் 
அழுகைகூட வரவில்லைவெளியே
மழை கொட்டிக்கொண்டிருந்தது
எல்லோரும் உறங்கிய
பிறகு அவன் வெளியேறினான்
எங்கேயாவது கண்காணாமல் 
போய்விடவேண்டும் யாருக்கும் 
சொல்லாமல்பசவாவுக்குக் கூட 
சொல்லாமல்பிறகு 
எங்கிருந்தாவது அவனுக்கு 
மட்டும் தகவல் சொல்லலாம்.  
அவன் குருட்டாம்போக்கில் மழையில் 
நனைந்தபடி ஓடினான்.

ரயில் நிலையத்தில் ஒரு ரயில் 
நின்றிருந்ததுஅதில் ஏறிக்கொண்டான்
வண்டி ஓட ஆரம்பித்ததும் மனசு 
இனம் புரியாத விடுதலை 
உணர்வில் பரபரத்ததுஇதுவரை 
எங்கும் தனியாகச்சென்றதில்லை
கையில் காசு இல்லைஎன்ன 
செய்யப்போகிறோம் என்று யோசிக்கக் 
கூட இல்லை.   டிக்கெட் 
பரிசோதகர் வரும்போதெல்லாம் 
அவன் கழிப்பறையில் மறைந்து கொண்டான்ரயில் கடைசியாக 
நின்றபோது அவனும் இறங்கினான்
மும்பை தாதரில்மும்பை மகாபெரிய 
நகரம் என்று கேள்விபட்டிருக்கிறான்
இங்கு ஏதாவது வேலைசெய்து 
பிழைக்கலாம்பூ மட்டும்தான் 
கட்டத்தெரியும் அவனுக்கு
பத்தாவது ஃபெயிலானவனுக்கு 
என்ன வேலை கிடைக்கும்
பசித்ததுஒரு நகைக் கடை 
கண்ணில் தென்பட்டது.விரலில் 
இருந்த தங்க மோதிரத்தை  
கல்லா பெட்டியில் அமர்ந்திருந்தவரிடம் 
காட்டி விற்க விரும்புவதாகச் 
சொன்னான்தலையில் வெள்ளை 
குல்லாய் அணிந்திருந்த அவர் ஒரு 
முஸ்லிம் என்பதை 
உணர்ந்து உருதுவில் கேட்டான்
அவனை அவர் உற்றுப்பார்த்தார்.
வீட்டைவிட்டு ஓடிவந்தியா?’ 
என்றார்.
அவன் பதில் சொல்லாமல் தலையைக் 
குனிந்துகொண்டான்.
என்ன பேரு?’
அயூப் கான்.
அவர் மோதிரத்தை நிறுத்துப் 
பார்த்து ரூபாயை எண்ணி 
ஒரு கவரில் போட்டுக்கொடுத்தார்.
ஜாக்கிரதையா வெச்சுக்க
மும்பை பொல்லாத 
ஊருஎங்க தங்கப்போறே?’
அவன் விழித்தான்.
அவர் புன்னகையுடன் பக்கத்திலிருந்த 
ஒரு அலமாரியிலிருந்து 
ஒரு சின்ன வெள்ளை பின்னல் 
குல்லாவை எடுத்தார்
இதை தலையிலே போட்டுக்கணும்
முஸ்லிமா இருந்து இப்படி 
அடையாளம் இல்லாம திரியக்கூடாது .
அவன் அதைப் போட்டுக்கொள்ளும் வரை அவர் காத்திருந்தார்
அவன் அதை அணிந்தான்
மைசூரில் மசூதிக்குச் செல்லும்
போது மட்டுமே அணிந்து 
பழக்கம்.  இனிமே நீ நம்ம ஆளு
நம்ம வீட்டிலே தங்கிக்கலாம்
சாப்பிடலாம்.’ 
அவனுக்கு நம்பமுடியவில்லை
எத்தனை நல்லவர்கள் 
மும்பையில் இருக்கிறார்கள்
இங்கு வந்து சேர்ந்தது எந்த 
வகையிலோ தனக்கு வெற்றி 
என்று அவனுக்கு நிச்சயமாயிற்று
அம்மிக்கு அவன் 
விரைவில் எழுதுவான்
வாப்பாவுக்குச் சொல்லு 
நா இங்க ரொம்ப சந்தோஷமா 
இருக்கேன்சீக்கிரத்திலே சுயமா 
சம்பாரிச்சு பெரிய மனுஷனாகி 
காண்பிக்கப்போறேன்’.

யாசின் முபாரக் கான் அந்தப் 
பகுதியில் எல்லாருக்கும் 
வேண்டியவராக இருந்தார்
அவர் வீட்டில் அவனைப்போல 
இன்னும் நான்கு இளைஞர்கள் 
இருந்தார்கள்அன்பாகப் 
பேசினார்கள்மூன்று 
வேளை சாப்பாடு கிடைத்தது
ஐந்து வேளை தொழுகை 
நடந்தது.தொழுகையின்
போது தினமும் வீட்டில் 
ஐம்பதுபேருக்குமேல் குழுமினார்கள்.
அவனுக்குக் கொடுக்கப்பட்ட 
சின்னச் சின்ன வேலைகளை 
அவன் சந்தோஷமாகச் செய்தான்
பழக்கமில்லாத ஊரில் வாழ்க்கை 
இத்தனை சரளமாக அமையும் 
என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை 
என்பதால் மனத்தை ஒரு நன்றி உணர்வு 
நிறைக்கும்
படே பாய்பெரிய அண்ணன் 
என்று எல்லோரும் அழைத்த 
யாசின் முபாரக் கான் எத்தனை 
நல்லவர் என்று பிரமிப்பு ஏற்படும்.
அன்று எப்போதும் போல் விடிந்தது
யாசின் முபாரக் கான் விடிகாலையில் 
எழுந்திருந்து யார் யாருடனோ 
தொலை பேசியில் பேசியபடி 
இருந்தார்வழக்கத்துக்கு விரோதமாக 
தொழுகையின் போது அவர் மட்டும் 
இருந்தார்வீட்டுப் பெண்கள் 
யாரையும் காணோம்ஊருக்குப்
போயிருப்பதாகச் சொன்னார்கள்
நாஷ்டா ஹோட்டலிலிருந்து 
வந்தது.  யாசின் கான் அன்று 
கடைக்குச் செல்லவில்லை.
அவனைத் தவிர மற்றவர்களை 
படே பாய் எங்கோ அனுப்பிவிட்டு 
தொலைக்காட்சி பெட்டியின் முன் 
உட்கார்ந்திருந்தார்ஒவ்வொன்றாகச் 
செய்தி வர ஆரம்பித்ததுமும்பையில் 
பல இடங்களில் குண்டு வெடிக்க 
ஆரம்பித்ததுஅவனும் ஒரு மூலையில் 
உட்கார்ந்து  திகைப்புடன் பார்த்தான்
மனிதர்கள் செத்து விழுந்திருந்தார்கள்கலவரமடைந்த 
ஜனக்கூட்டம் அலறிக்கொண்டு 
இங்கும் அங்கும் ஓட
ஆரம்பித்ததுசிலர் காயம்பட்டு 
அழுதபடி இருந்தார்கள்டிவிக்காரர்கள் 
உரத்த படபடத்த குரலில் 
கத்திக்கொண்டிருந்தார்கள்என்ன 
பேசுகிறார்கள் என்றே புரியவில்லை
பீதியில் அவன் உறைந்துபோனான்
ஆத்தங்வாதிகளின் தாக்குதல்’  என்று 
திரும்பத்திரும்ப வார்த்தைகள் ஒலித்தன.

ஆத்தங்வாதின்னா என்ன?” என்றான் 
அவன் பலத்த குரலில்.  யாசின் கான் 
திடுக்கிட்டவர்போல்
அவனைப்பார்த்தார்
பயங்கரவாதின்னு அர்த்தம்.’ என்றார் 
அவர் மெல்லிய எரிச்சலுடன்.
“ அவங்க கொலைகாரங்கசைத்தான்கள்.
எதுக்கு இப்படி தெருவிலே போறவங்களை
யெல்லாம் கொல்லணும்அவங்க 
நம்ம வீரோதிகளா பாகிஸ்தானியா?” 
என்றான் அவன் படபடப்புடன்.
அட சட்பெரிய மனுஷன் மாதிரி 
பேசாதேஉன் வேலையைப்பாரு 
போ.” என்றார் அவர் என்று
மில்லாத கோபத்துடன்.
அவன் எழுந்து அவனுக்கு 
ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் 
சென்றான்மார்பு இன்னும் பீதியில் 
படபடத்ததுஎன்ன நடக்கிறது 
இந்த ஊரில்மைசூரில் இப்படி 
எதுவும் நடந்து அவன் பார்த்ததில்லை
படே பாய் இன்று வேலைக்குச் 
செல்லாதது வியப்பாக இருந்தது
இந்தக் கலவரம் முடிந்தபிறகு 
அவரிடம் சொல்லிக்கொண்டு 
ஊருக்குத் திரும்பி
விடவேண்டும் என்று அவன் 
நினைத்துக் கொண்டான்.ஜன்னல் 
வழியே தெரிந்த தெரு வெறிச்சோடிக் 
கிடந்ததுஎல்லோரும் பயந்து 
வீட்டுக்குள் இருந்தார்கள்
இரண்டுநாட்கள் எல்லோரும் 
வீட்டுக்குள்ளேயே முடங்கி 
இருந்தார்கள்கடைத்தெருவே 
மூடிவிட்டதால் படே பாய் கடைக்குச் 
செல்லவில்லைமூன்றாம் நாள் 
படே பாய் எங்கோ கிளம்ப
ஆயத்தமானவர்போல் இருந்தார்
அவர் கொல்லைவழியாகக் 
கிளம்ப யத்தனித்தபோது போலீஸ் 
வந்ததுஅவருக்குக் கை
விலங்கிட்டதுஅவனுக்குத்
தூக்கிவாரிப்போட்டதுகண்கள் 
விரிய பார்க்கும் போதே அவனையும் 
மற்ற பிள்ளைகளையும் 
கழுத்தை நெம்பித் தள்ளி போலீஸ் 
வேனில் அடைத்துச் சென்றது.  
அங்கிருந்து நேராக சிறையில் 
அடைத்தார்கள்அவன் என்ன 
தப்பு செய்தான் என்று அடைத்தார்கள் 
என்பது அவனுக்குத் 
தெரியவே வராத மர்மம்
வெளிஉலகத்தில் என்ன 
நடக்கிறது என்று தெரியாமலே 
கழிந்தன இருபது 
வருஷங்கள்.  அந்த இடைவெளியில் 
அவன் அனுபவித்த...
அவன் நிறுத்தினான்அந்தக் 
கொடுமைகளை அம்மியிடம் 
சொல்லமுடியாதுஅடியும் உதையும் 
மின்சாரக் கம்பியினால்  ஆண்குறியில் 
கிடைத்த அதிர்வலை தண்டனைகள் .
காவலர்கள்சகக் கைதிகளின் பாலியல் 
பலாத்காரங்கள் இவற்றையெல்லாம் 
பெற்றவளிடம் எப்படிச்சொல்வது?
“ அம்மிரொம்பக் கஷ்டப்பட்டேன் 
எதுக்குன்னே புரியாம.  முந்தா நாள் 
திடீர்னு உனக்கு விடுதலை
உன் மேலத் தப்பில்லேன்னு கோர்ட்டு 
சொல்லிடுச்சு என்கிறாங்க.
அம்மா கண்ணீர் மல்கக் கேட்டாள் 
“ இருபது வருஷம் ஆச்சா 
அவங்களுக்குச் சொல்ல?”
வெகுநேரம் மௌனமாக இருந்தாள் 
ஏதோ யோசனையில் இருப்பவள் 
போலஅவளது உடலின் கதகதப்பில் 
அவனுக்குத் தூக்கம் வந்தது.
மனசின் சுமையை இறக்கியதில் 
லேசாகியிருந்தது.
அம்மி மெல்லக் கேட்டாள், “ அயூப்உண்மையைச் சொல்லு
நீ எந்த தப்பு தண்டாவும் செய்யல்லியே?”
அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது
விருக்கென்று எழுந்தான்
“ அம்மிஎன்மேல உங்களுக்கு 
நம்பிக்கை இல்லையாநா 
சொன்னதெல்லாம் 
நிஜம் அம்மி.
அம்மியின் கண்களில் நீர் 
நிறைந்திருந்தது
பேசுவதற்கு சிரமப்படுவது தெரிந்தது.
அவனை நேரடியாகப் பார்க்காமல் 
தொலைவைப் பார்த்தபடி சொன்னாள்.
 “ காலம் கெட்டுக் கிடக்கு அயூப்
நம்ம ஜனத்திலே பெத்த புள்ளை 
என்ன செய்யறான்னே ரொம்ப
பேருக்குத் தெரியல்லே.நம்ம 
பேரைச் சொன்னாலே 
சந்தேகத்தோட மத்த ஜனங்க 
பாக்கறாங்க.நாட்டிலே எந்த 
மூலையிலே குண்டு வெடிச்சாலும் 
நாம பயந்து சாக வேண்டியிருக்கு.
பசங்க காணாம 
போறாங்க.  போலீஸ் 
நம்ம வீட்டைத் தேடிவந்துச்சுன்னா 
வாப்பா அவமானத்திலே செத்துடுவாங்க
அவன் திகைப்புடன் அவளைப் பார்த்தான்
வயதுக்குமீறிய மூப்பின் கோடுகள் 
தெரிந்த அந்தத் தளர்ந்த முகத்தில் 
புதிய கவலைக் கோடுகள் 
தெரிவதாகத் தோன்றிற்றுவலைப்
பின்னல்போல அவை அதிகரித்து 
அவளுடைய முகத்தையே 
மாற்றின . அவற்றைக் கிழித்தெறிய 
வேண்டும் போல அவனுக்குப் 
பதறிற்றுஎப்படிஎதன்மேல் 
சத்தியம் செய்தால் அவள் 
அவனைப் புரிந்துகொள்வாள்?
அவனுக்கு அடிவயிறு துவண்டது
மனத்தை இனம் புரியாத கலக்கம் 
ஆட்கொண்டதுதான் எத்தனை  
விளக்கிச் சொன்னாலும் புனித 
குரான் மேல் சத்தியம் செய்தாலும் 
அம்மிக்கு அடிமனத்தில் சந்தேகம் 
இருக்கும் என்கிற உணர்வு 
தாங்கமுடியாத அதிர்ச்சியாக இருந்தது.
அம்மி” என்று அவன் சொல்ல 
ஆரம்பிக்கையில்,அவள் அவன் 
வாயைப் பொத்திக் கைகளைப் 
பற்றினாள்கண்களில் நீருடன் 
ரகசிய குரலில்,“ அயூப்என்னைத் 
தப்பா நினைக்காதேநீ எங்கயாவது 
போய் பிழைச்சுக்கோஇங்க மட்டும் வராதே” 
என்றாள்.

அவன் நம்பமுடியாமல் அவளையே 
பார்த்தபடி நின்றான்அவளை 
ஒரு பீதி அழுத்தியதாகத் தோன்றிற்று
அவன் சீக்கிரம் வெளியேற 
அம்மி காத்திருந்ததுபோல் 
இருந்ததுஎன்னென்னவோ 
வார்த்தைகள் உள்ளே 
பீறிட்டுக்கொண்டு கிளம்பின
நா குற்றமற்றவன்னு நீதி 
மன்றமே சொல்லிடுச்சு..  
நானும் சகஜமான வாழ்க்கை 
வாழ ஆசைப்படறேன் அம்மி.  
வேலைக்குப் போகணும்
மனசுக்குப்புடிச்ச பொண்ணை 
நிக்காஹ் செய்துக்கணும்..
வாப்பாவுக்கு உதவியா 
இருப்பேன்அஹமதுக்குத் 
துணயா இருப்பேன்..  
இருபது வருஷங்களாக இந்த 
தருணத்திற்குக் காத்திருந்ததைச் 
சொல்லலாமா 
என்று யோசிக்கையில்,
  “நீ கிளம்பு கண்ணுமருமக 
குலாபிக்குத் தெரிஞ்சா 
ரகளை ஆயிரும்.” என்றாள் அம்மி.
அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
யாரு?”
குலாபிபூக்கடைக்கு 
வருவாஅகமதுக்குப் புடிச்சுப்போச்சு.
நிக்காஹ் ஆகிப் பத்து வருஷம் 
ஆச்சு.
அதை கிரகித்துக்கொள்ள 
சில விநாடிகள் பிடித்தன
சடசடவென்று அவன் 
நிர்மாணித்த கனவுக் கோட்டைகள் 
கண்ணெதிரில் சரிந்தனஎடுத்து அள்ள முடியாத துகள்களாகப் பரவி 
அவனது நெஞ்சுக்குழியை அடைத்தன.  
அம்மி அந்தத் துகள்களில் புதைந்து
விட்டதுபோல  இருந்தது
அவன் சில விநாடிகள் கழித்து 
அவளது கைகளைக் கண்ணில் 
ஒற்றி மெல்லப் புன்னகைத்தான்.
தன்னைவிட ஒரு பைத்தியக்காரன்
யாரும் இருக்கமுடியாது என்று தோன்றிற்று.
“  நா கிளம்பறேன் அம்மி.” என்று
விட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தான்.
எந்தவித யோசனையும் மூளையில் 
உதிக்கவில்லைஸ்தம்பித்த 
நிலையில் பேருந்து நிலையத்தை
நோக்கி நடந்தான்வழியில் இருந்த 
பசவப்பாவின் ஹோட்டலை 
அவசரமாகக் கடந்து சென்று 
பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 
பஸ்ஸில் ஏறி ஜன்னலோரமாக 
அமர்ந்துகொண்டான்பலத்த 
காற்று சில்லென்று அடித்தது 
மழைவரும் போல.தரையில் 
இருந்த  காய்ந்த இலைச் 
சறுகுகள் காற்றில் எழும்பி நகர்ந்தன.



   

No comments:

Post a Comment