Friday, 15 May 2015

வெறுப்பு அரசியல்


                        

[தமிழகத்தில் அரசியல் நாகரிகமே இல்லாமல் போனதிற்கு திராவிட இயக்கமே காரணம்என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு கி. வீரமணி சொல்கிறார்.]

  

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’  என்று பாடியவர்  தமிழ் மண்ணில் பிறந்த  மகாகவி. பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சேஎன்றார்.
இப்போது புகை நடுவில் தீயும் கண்ணுக்குத் தெரிவதில்லை, பகை நடுவில் பரமனும் இருப்பதாக யாரும் நினைப்பதில்லை. முக்கியமாக இன்றைய தமிழக அரசியல் உலகில் - பகைவர்களாகத் தாம் நினைக்கும் நபர்களை அழிக்க பகிரங்கமாக அந்தப் பரமன் சன்னிதிக்கே போய் அமர்ந்து துஷ்ட சம்ஹார ஹோமம் செய்யப்படுகிறது. புராணங்களிலும் தொன்மங்களில் கேள்விபட்டதுபோல.   அரசியல் நாகரிகமா? அது காணாமல் போய் இரு மாமாங்க காலத்துக்குமேல் ஆகிறது. அரசியல் கட்சிகளிடையே  வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒரு பகைமை உணர்வு தமிழ் நாட்டில் வெளிப்படுவது மிக விநோதமான  காட்சிதான்அதற்குக் காரணம் திராவிட இயக்கமே என்று சமீபத்தில் திராவிடக் கழகத்தின் தலைவரும் பெரியாரின் சீடருமான கி.வீரமணி சொன்னதாக வந்திருக்கும் செய்தி வியப்பை அளிக்கிறது.
2003 -இல், பெங்குவின் பதிப்பகத்திற்காக நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த CUT-OUTS,CASTE AND CINE STARS‘ என்ற புத்தகத்திற்கு  சில விவரங்களை சேகரிக்க அவரைக் காணச் சென்றிருந்தேன்பெரியார் திடலில் இருந்த அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி அலமாரிகளில்  பெரியாருக்கு சொந்தமான சில பொருள்கள், பரிசுகள் அன்பளிப்புகள் வைக்கப்படிருந்தன. அவற்றில் அவர் உபயோகித்த கைத்தடியும் இருந்தது. பாம்பையும் பாப்பானையும் பார்த்தால் பார்ப்பானை அடிஎன்று பெரியார் சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்து எனக்குள் சிரித்துக்கொண்டேன். இந்தத் தடியால் எந்த பாப்பானையாவது அவர் அடித்திருப்பாரா? அத்தனை வெறுப்பு கக்கும் வார்த்தைகளை மேடையில் உபயோகித்தவர்  சொந்த வாழ்வில்  பாப்பான்களுடன்நெருக்கமாக இருந்தார் என்பதுதான் விசித்திரம்அவருடைய கொள்கைகளிலிருந்து மாறுபட்ட சக்கரவர்த்தி ராஜகோப்பாலாச்சாரியிடம் அவருக்கு இருந்த நட்பும் மரியாதையும் கடைசி வரை நீடித்தது. ராஜாஜி மரணமடைந்தபோது, தனது தள்ளாத வயதிலும் பெரியார் மயானத்துக்குப் பிடிவாதமாகச் சென்றதை, சடங்கு முடியும் வரை கண்ணீர் மல்க அமர்ந்திருந்ததை  வீரமணி நினைவுகூர்ந்தார்அவருடைய பேச்சுகள் வன்முறையைத் தூண்டவில்லையா?‘   ‘இல்லவே இல்லை.என்றார் வீரமணி.ஐயா உயிரோடு இருக்கும் வரை ஒரு வன்முறையும் நடக்கவில்லை. ஜாதிச் சண்டை இருக்கவில்லை’.  
ஜாதிய அடுக்கில்  இருந்த பார்ப்பனிய ஆதிக்க சக்தியையும் அதைச் சார்ந்த கடவுள் வழிபாட்டையும்  ஒடுக்கினால் சமதர்மம் தன்னைப்போல் வரும் என்பது அவரது வியூகம். நாத்திகம் அவரது பிரதான அஜெண்டா  இல்லை. தமிழ் சமூகத்தில் ஒரு ஜனநாயகத் தன்மை வரவேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிப்பது முக்கியம் என்பதே அவரது நோக்கம்.
 மக்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார்கள்கடவுள் பத்திரமாக இருந்தார். பார்ப்பனியம் வேறு பரிமாணங்கள் பெற்றது. திராவிட இயக்கத்தாலேயே பேச்சுரிமையையும் ,கல்வியையும் சுய கௌரவத்தையும் பெற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் தமது அடையாளத்தை வலியுறுத்த பார்ப்பனிய பூச்சைப் பூசிக்கொள்ள ஆரம்பித்தன. பொருளாதார வலுப்பெற்று குழுக்களாகப் பிரிந்தனபலப் பல சுவர்கள் எழும்பிவிட்டன. சுவரை உடைக்கும் தீவிரம் வாக்கு வங்கி அரசியல் களத்தில் எந்தத் தலைவருக்கும் இல்லை.
வீரமணியின் ஆதங்கம் வேறு. வட மாநிலங்களில்  பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் அரசியலில் கடும் போட்டியாளர்களாக பரம வைரிகளாகக் காட்சி அளித்தாலும் பொது வாழ்வில் வேற்றுமை பாராட்டாமல் நட்பு காண்பிக்கையில் தமிழ் நாட்டில் ஏன் பரஸ்பர வெறுப்பை பொது வாழ்விலும் காண்பிக்கிறார்கள் என்று அங்கலாய்க்கிறார். அதற்கு திராவிட இயக்கம்தான் காரணமா?
அவர் கூற்றுப்படியே இத்தகைய போக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருப்பதாக அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. தமிழ் நாட்டில்  பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த  ஆண் தலைவர்களிடையே அத்தகைய போக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ராமதாஸ் கருணாநிதியை சந்திக்கிறார். தன் வீட்டுத் திருமணத்துக்கு அழைக்கிறார்பா.சிதம்பரம்  கோபாலபுரம் வீட்டுக்குச் செல்கிறார். மூப்பனார் எல்லோருடனும் நட்புடனே இருந்தார். விஜயகாந்தும் கருணாநிதியை சந்திக்க நேர்ந்தால் பாராமுகமாகப் போவார் என்று தோன்றவில்லை. வைகோ
சிறையில் இருந்த போது கருணாநிதி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தமிழ் தொலைக்காட்சி விவாத மேடைகளில் பல கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் காரசாரமாகப் பேசினாலும் பரஸ்பரம் நட்புடன் பழகுகிறார்கள்.
வீரமணி முன்வைக்கும் இந்தப்ப் பிரச்சினையின் மையப்புள்ளி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைச் சொல்வது எனது பார்வையில் சுலபம்.
 அது 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி  தமிழக சட்ட சபையில் அன்றைய முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டை சமர்ப்பிக்க எழுந்த கணத்தில் எரிமலையாய்  வெடித்தது. அன்று நடந்த அமளியில்  எதிர்கட்சித் தலைவர்  இருக்கையில் இருந்த ஜெயலலிதா அவமானப்பட்டு மிதமிஞ்சிய சீற்றத்துடன் அவையைவிட்டுக் கிளம்பிய தருணம் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்றது. 17-ம் நூற்றாண்டு ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் காங்க்ரீவ்  எழுதியது போல ‘Hell hath no fury like a woman scorned.‘ அன்று நடந்தது தமிழகச் சட்டப்பேரவையின் மிகப் பெரிய கரும்புள்ளி என்பதை மறுப்பதற்கில்லை. அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அப்போது அரசியல் பார்வையாளர்களுக்கோ தி.மு.. வுக்கோ கற்பனையில் உதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் இயல்பைக் குறைவாகவே மதிப்பிட்டிருப்பார்கள்.   பாஞ்சாலியைப்போல சபதமிட்டபடி  வெளியேறிய ஜெயலலிதாவுக்குக்  கருணாநிதியின் மீது அன்று ஏற்பட்ட  கோபமும் வெறுப்புமே  பின்னாளில் அவருடைய  எல்லா அரசியல் நடவடிக்கைகளுக்கும் உந்து சக்தியாயிற்று. தமிழ்நாட்டின் கடந்த முப்பது ஆண்டு வரலாற்றை கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பகையே நிர்ணயிதிருக்கிறது. பல திரைப்படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதிய கருணாநிதியின் கற்பனைக்கு அப்பாற்பட்ட தாக்கம் கொண்ட நிகழ்வு  அந்த மார்ச் 25.   அன்றிலிருந்து ஜெயலலிதா கருணாநிதியைப் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தார். அவரை நம்பி இருக்கும் கட்சியும் அதன் உறுப்பினர்களும் அவரைப் பின்பற்றுகிறார்கள்வளர்ப்பு மகன் திருமணத்துக்கு ஊர் உலகத்தையெல்லாம் அழைத்த ஜெயலலிதா கருணாநிதியை அழைக்கவில்லைமுரசொலி  மாறன் இறந்தபோது பகையை  மறந்து துக்கம் விசாரிக்க ஜெயலலிதா நேரில் செல்லவில்லை. அதிமுக சார்பில் ஒரு மலர் வளையம் கூடச் செல்லவில்லை.
சுனாமி பேரழிவின் போது மு..ஸ்டாலின் நேரில் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து காசோலை கொடுத்தார். அதற்குப் பிறகும் அம்மாவிடம் எந்த இளக்கமும் தெரியவில்லை.
வெறுப்பு தொடர்கிறது. வீம்பு வளர்கிறது. மக்கள் செல்வாக்கும் அறுதிப் பெரும்பான்மையும் அதற்கு பலமளிக்கிறது. யாருடைய நட்பும்  தேவையில்லை இப்போது. புதிராக விலகி  கண்ணுக்குப்புலப்படாத பீடத்தில் இருப்பதே  உத்தமம். அதுவே பீதியை வளர்க்கிறதுசின்ன எதிர்ப்பையும் அனுமதிக்க மறுக்கிறது. விமர்சனங்கள் கடுமையாக தண்டிக்கப்படும். ஊடகங்களின் வாயை ஒடுக்கும். திராவிடக் கட்சி தலைவரைக்கூட அதன் வீச்சு தடுமாற வைக்கும்.   
  அதைக் கட்சிக்காரர்கள் வளர்க்கிறார்கள் . அந்த வசீகரம், அந்த ஆளுமையின் நீடித்த பிரகாசம் கட்சிக்குத் தேவை. ஜெயலலிதா இல்லாவிட்டால் அவர்கள் இல்லை. அதை இருவரும் உணர்ந்திருக்கிறார்கள்.   அம்மாவே சரணம். அவர் மக்கள் முதல்வர். அவரது சொந்த ஆற்றலால், மிதமிஞ்சிய துணிச்சலால் அந்த நிலையை எட்டியிருப்பவர். எத்தனை எத்தனை இடர்பாடுகளைக் கடந்து! நெருப்பாற்றில் நீந்திவந்தவர். துர்கையின் அவதாரம் அவர். கருணையின் வடிவம். ஆனால் மன்னிக்கமாட்டார். எல்லோரும் அவருக்குப் பகையாக இருந்தவர்கள். அவரை அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டித் துன்புறுத்தியவர்கள். அவர்களின் சதிகள் இன்னும் அம்மாவை ஆட்டிப்படைக்கின்றன. அவர் எவருடனும் நட்பு பாராட்டவேண்டிய அவசியமில்லை. அரசியல் நாகரிகம் எங்கிருந்து வருகிறது? அம்மாவிடம் அவரது எதிரிகள் அதைக் காண்பித்தார்களா
வீரமணி பேச்சில் இருக்கும் அங்கலாய்ப்பு நியாயமானது .
ஆனால்  தமிழ் சூழலில் அவர் குறிப்பிடும் விபரீதங்களுக்குக்  காரணம் திராவிட இயக்கம் அல்ல.

       


                           

No comments:

Post a Comment